திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : திங்கள், 19 ஜூலை 2021 (10:24 IST)

’நராகாசுரன்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

அரவிந்த் சாமி நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசுரன் திரைப்படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த படத்தை ரிலீஸ் செய்வதில் பல்வேறு பிரச்சனைகள் இருந்தது. அதனை அடுத்து கார்த்திக் நரேன் மாபியா என்ற திரைப்படத்தை இயக்கி அதை ரிலீசும் செய்துவிட்டார் என்பதும், தற்போது அவர் தனுஷ் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நரகாசுரன் திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய கடந்த சில வாரங்களாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து தற்போது வந்துள்ள செய்தியின்படி நரகாசுரன் திரைப்படம் ஆகஸ்ட் 13-ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது 
 
அரவிந்தசாமி, இந்திரஜித், ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷான் ஆத்மிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரான் எதான் யோஹன் இசையமைத்துள்ளார். சுஜித் சரங் ஒளிப்பதிவும், ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படம் கார்த்திக் நரேனின் இன்னொரு வெற்றிப்படமாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்