செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 30 செப்டம்பர் 2021 (15:30 IST)

விஜய்க்கு வில்லனாகும் நானி?

விஜய்யின் 66 படத்தில் வில்லனாக நடிக்க தெலுங்கு நடிகர் நானியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்.

 
தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஆம், விஜய்யுடன் தில் ராஜூ மற்றும் வம்சி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள படக்குழுவினர் தளபதி 66 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். 
 
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரது படம் உருவாக உள்ளது விஜய்யின் 66. படத்தின் பூஜை தசரா பண்டிகையின்போது நடக்கும் என  தெரிகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். அதோடு இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க தெலுங்கு நடிகர் நானியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என செய்திகள் வெளியாகி வருகின்றன.