1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 29 செப்டம்பர் 2021 (18:09 IST)

’விஜய் 66 ’படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்! ரசிகர்கள் மகிழ்ச்சி

’விஜய்66’ படத்தின் முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரது படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய்யுடன் தில் ராஜூ மற்றும் வம்சி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள படக்குழுவினர் தளபதி 66 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர், அதில், விஜய்யின் 66 படத்தின் பூஜை தசரா பண்டிகையின்போது நடக்கும் எனத் தகவல் வெளியாகிறது.

இந்நிலையில் தற்போது ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதில், பாய்ஸ் படத்தில் ஐந்து ஹீரோக்களில் ஒருவராக நடித்த தமன் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்  இவர் விஜய் 66 படத்தில் அவருடம் முதன்முறையாக இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்