1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 9 ஜூலை 2019 (13:04 IST)

அந்த இடத்திலெல்லாமா டாட்டூ குத்துவாங்க! சமந்தாவின் ரகசியத்தை லீக் செய்த கணவர்!

நட்சத்திர காதல் தம்பதிகளான சமந்தா, நாக சைதன்யா இருவரும் சந்தோ‌ஷமாக வாழ்க்கையை அனுபவித்து வருவதோடு மற்ற சினிமா பிரபல தம்பதிகளுக்கும் முன்மாதிரியாக வாழ்ந்து வருகின்றனர். 

 
திருமணத்திற்கு பின்பும் சமந்தா அடுத்தடுத்து பல வெற்றி படங்களில் நடந்து முன்னணி நடிகையாக இருந்து வருவதோடு டஜன் கணக்கில் கால்ஷீட்டையும் வைத்துள்ளார். தற்போது சமந்தாவின் வித்யாசமான நடிப்பில் உருவாகிவரும்  ஓ பேபி திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகவுள்ளது. 
 
இந்நிலையில் சமூகவலைந்தங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்துவரும் சமந்தா அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு வெள்ளை நிற உடையணிந்து கவர்ச்சி போஸ் கொடுக்க,  மேலே அணிந்திருக்கும் ஆடை சிறிது விலகியாதல் அவரின் ரகசிய டாட்டூ ஒன்று தெரிகிறது. 


 
இதைப்பற்றி தெரிவித்த சமந்தா "என் இனிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதுநாள் வரை நான் மறைத்து வைத்த டாட்டூவை கடைசியாக வெளியில் என்று கூறியுள்ள அவர் "என் கணவர், என் உலகம்"  என நாகசைதன்யாவிற்கும் டேக் செய்து பதிவிட்டுள்ளார்.   


 
அதுமட்டுமின்றி சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் தங்கள் கைகளில் ஒரே மாதிரியான டாட்டூவை குத்தியிருப்பார்கள். அதற்கு தம்பதிகள் என்று அர்த்தமாம். தற்போது இந்த தம்பதிகளின் டாட்டூ புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.