செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 25 மார்ச் 2019 (15:54 IST)

'நேர்கொண்ட பார்வை' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வரும் மே மாதம் 1ஆம் தேதி அவருடைய பிறந்த நாளின்போது ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது. ஆனால் மே மாதம் 'நேர் கொண்ட பார்வை' ரிலீஸ் இல்லை என்றும் ஜூன் அல்லது ஜூலையில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று பின்னர் செய்திகள் வெளிவந்தது
 
இந்த நிலையில் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்றும் இதுகுறித்து தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தான் வெளியிடுவதாகவும் அஜித்தின் பி.ஆர்.ஓ சுரேஷ் சந்திரா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
ஆகஸ்ட் 10ஆம் தேதி சனிக்கிழமையாக இருந்தாலும் பக்ரீத், சுதந்திர தினம் என தொடர்ச்சியாக விடுமுறை தினங்கள் இருப்பதால் இந்த படம் ஒரு நீண்ட விடுமுறை தினங்களை கொண்ட படமாக இருக்கும் என்றும் அதனால் ஓப்பனிங் வசூல் பிரமாதமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.