1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 20 மார்ச் 2019 (16:24 IST)

அஜித்தை குறிவைத்து ஸ்ரீரெட்டி போட்ட போஸ்ட்: தல ரசிகர்களின் ரியாக்‌ஷன் என்ன?

நடிகை ஸ்ரீ ரெட்டி அஜித் குறித்து ஒரு போஸ்டை தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டிருக்கிறார்.
 
தெலுங்கு திரையுலகில் அடுக்கடுக்காய் பல இயக்குனர்கள், நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டைக் கூறி பரபரப்பை கிளப்பியவர் தான் ஸ்ரீரெட்டி. அவர் தற்பொழுது சென்னையில் வசித்து வருகிறார்.
 
தமிழ்திரையுலகில் முருகதாஸ், ஸ்ரீகாந்த், சுந்தர்சி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீதும் பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். சற்றுகாலம் யார் மீதும் எந்த குற்றச்சாட்டையும் வைக்காமல் இருந்து வந்தார். தற்போது மீண்டும் சில பிரபலங்கள் மீது குற்றச்சாட்டை கூறி வருகிறார்.
 
இந்நிலையில் ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அஜித் பற்றி ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அஜித் போட்டோவை பார்க்காமல் நான் தூங்க மாட்டேன். அஜித் தமிழகத்தின் நம்பர் 1 ஹீரோ. எல்லா சர்ச்சைகளிலும் இருந்து விலகியே இருப்பார். மென்மையாக பேசக்கூடியவர். நல்ல குடும்பஸ்தன். தன் ரசிகர்கள் மீது அளவுக்கடந்த பாசம் வைத்துள்ளார். நல்ல கணவர் மற்றும் குழந்தைக்கு நல்ல தந்தை. கோடிக்கணக்கான பெண்களின் இதயத்தை திருடியவர் என் இதயம் உட்பட என அஜித்தை புகழ்ந்துள்ளார். இதனைப் பார்த்த அஜித் ரசிகர்கள் ஸ்ரீரெட்டியை பாராட்டி வருகின்றனர்.