1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 2 ஆகஸ்ட் 2023 (12:05 IST)

’நான் கடவுள்’ படத்தில் நடித்த நடிகர் ஆதரவற்ற நிலையில் மரணம்.. சொந்த ஊருக்கு செல்லும் உடல்..!

கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள்,  பாலா இயக்கத்தில் ஆர்யா நடித்த நான் கடவுள் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் மோகன். இவர் மதுரையில் ஆதரவற்ற நிலையில் மரணம் அடைந்ததை அடுத்து அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்தவர் நடிகர் மோகன். இவர் மதுரை திருப்பரங்குன்றம் என்ற பகுதியில் ஆதரவற்ற நிலையில் இருந்த நிலையில் இன்று அவர் இறந்து விட்டதாக தெரிகிறது. 
 
இதனை அடுத்து அவரது உடல் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவருடைய சொந்த ஊரான மேட்டூருக்கு உடல் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.  
 
பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்த நடிகர் மோகன் ஆதரவற்ற நிலையில் இறந்து கிடந்துள்ளது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva