1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (11:52 IST)

வாணி ஜெயராம் மரணம் நிகழ்ந்தது எப்படி? பிரேத பரிசோதனை அறிக்கையின் தகவல்..!

vani jeyaram
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று காலமான நிலையில் அவரது மரணம் நிகழ்ந்தது எப்படி என்பது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. 
 
வாணி ஜெயராம் நெற்றியில் காயம் அடைந்ததால் அவர் காலமானதாக நேற்று செய்திகள் வெளியான நிலையில் அவரது உடல் நேற்று பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. 
 
இந்த நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனை அறிக்கைகளின் படி தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாணி ஜெயராம் படுக்கை அருகே இருந்த இரண்டு அடி மேஜை மீது அவர் விழுந்ததால் தலையில் படுகாயம் ஏற்பட்டதாகவும் இதனால் தான் அவரது மரணம் ஏற்பட்டதாகவும் அவரது மரணத்தில் எந்த விதமான சந்தேகமும் இல்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva