திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 14 ஜனவரி 2018 (17:15 IST)

போலீஸா? பொம்பள ரவுடியா? நாச்சியார் டிரெய்லர்

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நாச்சியார் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

 
மிகவும் எதிர்பார்பில் உள்ள பாலாவின் நாச்சியார் திரைப்படத்தில் ஜோதிகா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதில் ஜோதிகா உச்சரித்த வசனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
 
காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள ஜோதிகா மிரட்டியுள்ளார். யாரும் பார்க்காத ஜோதிகாவை பாலா வெளிகாட்டியுள்ளார். ஜி.வி.பிரகாஷ்க்கு இந்த நாச்சியார் நிச்சயம் பெரிய திருப்புமுனையை கொடுக்கும்.