தனுஷின் 'மாரி 2' படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் விபரம்
தனுஷ் நடித்த சூப்பர் ஹிட் படமான 'மாரி' படத்தின் இரண்டாம் பாகமான 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த முழு விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
தனுஷ், சாய்பல்லவி, கிருஷ்ணா, டொவினோ தாமஸ், வரலட்சுமி, ரோபோ சங்கர், வினோத், அஜய் கோஷ் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர். பாலாஜி மோகன் திரைக்கதை வசனம் எழுதி இயக்க, யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் பிரசன்னா படத்தொகுப்பில் வாசுகி பாஸ்கர் காஸ்ட்யூமில் ஸ்டண்ட் சில்வா சண்டைப்பயிற்சியில் இந்த படம் உருவாகவுள்ளது.
தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் இவ்வருடம் ஜூலையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.