திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 17 அக்டோபர் 2020 (16:08 IST)

சுந்தர் சிக்காக கதைக் கேட்காமலேயே நடித்த யோகி பாபு! ஏன் தெரியுமா?

இயக்குனர் சுந்தர் சி தயாரிக்கும் புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார் நகைச்சுவை நடிகர் யோகி பாபு.

தமிழ் சினிமாவின் தற்போதைய நம்பர் 1 காமெடி நடிகர் என்றால் அது யோகி பாபுதான். அந்த அளவுக்கு பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் சுந்தர் சி தயாரிக்கும் புதிய படத்துக்காக 26 நாட்கள் நடித்துக் கொடுத்துள்ளார். இந்த படத்தின் கதையைக் கேட்காமலேயே நடித்ததாகக் கூறும் யோகி பாபு சுந்தர் சி படம் என்றால் காமெடிக்கா பஞ்சம் இருக்கும் என நம்பி நடிக்க ஒத்துக்கொண்டாராம்.

கன்னட இயக்குனர் ராதாகிருஷ்ணா ரெட்டி இயக்கத்தில் ராஜ் பி.ஷெட்டி, பிரகாஷ் ராஜ், சுதா ராணி, அச்யூத் குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கன்னடப் படமான மாயாபஜார் 2016 என்ற படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி தனது உதவியாளர் பத்ரியின் இயக்கத்தில் உருவாக்கி வருகிறார். இதில் பிரச்சன்னா, யோகி பாபு மற்றும் ரைசா உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது.