1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 29 அக்டோபர் 2021 (20:32 IST)

நேரலையில் புனித் ராஜ்குமார் செய்தியை வாசிக்கும்போது அழுத தொகுப்பாளினி!

பிரபல நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவு என்று திரையுலகை மட்டுமின்றி ஒட்டுமொத்த பொது மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பெங்களூரைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று இன்று புனித் ராஜ்குமாரின் மறைவு செய்தியை ஒளிபரப்பி கொண்டிருந்தபோது அந்த செய்தி தொகுப்பாளினி திடீரென அழுததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
நேரலையில் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் போது அவர் புனித் ராஜ்குமாரின் மறைவின் துக்கம் தாங்காமல் கதறி அழுத காட்சி நேரடி ஒளிபரப்பின் போது பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் செய்தி தொகுப்பாளர்கள் செய்தி தொகுப்பாளினியை ஆறுதல் படுத்தி அதன் பின்னர் செய்தியை வாசிக்க வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.