திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 4 நவம்பர் 2023 (11:14 IST)

திருநங்கைகளை சினிமா சங்கங்களில் சேர்க்க மிஷ்கின் கோரிக்கை… உடனே ஏற்றுக்கொண்ட ஆர் கே செல்வமணி!

தனது தம்பி அதித்யா இயக்கும் டெவில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் இயக்குனர் மிஷ்கின். டெவில் படத்தில் விதார்த், பூர்ணா உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கலவி பாடல் என்ற முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகி கவனம் பெற்றது.

இந்நிலையில் நேற்று மாலை டெவில் படத்தின் இசை வெளியீடு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் பாடல்களை மிஷ்கின் முன்னிலையில் இசைக்கலைஞர்கள் இசைத்து பாடினர். நிகழ்ச்சியில் பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணியும் கலந்துகொண்டார்.

அப்போது அவரிடம் கோரிக்கை வைத்த மிஷ்கின் “அடுத்து நான் இயக்கும் படத்தில் 6 திருநங்கைகள் நடிக்கிறார்கள். அவர்களை நமது சினிமா சங்கங்களில் உறுப்பினர்களாக சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறினார். அதை ஏற்றுக்கொண்ட ஆர் கே செல்வமணி “உங்கள் கோரிக்கை இப்போதே ஏற்றுக்கொள்ளப் படுகிறது” என அறிவித்தார்.