1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வியாழன், 6 டிசம்பர் 2018 (10:53 IST)

96 படத்தில் நடிச்சது என்னோட அதிர்ஷ்டம்: வர்ஷா பொல்லம்மா

96 படத்தின் மூலம் பிரபலம் ஆனவர்  வர்ஷா பொல்லம்மா. இவர்  தற்போது சந்தோஷ் தியாகராஜன் இயக்கத்தில் சீமத்துரை படத்தில் நடித்துள்ளார். வரும் ஏழாம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இவர் அண்மையில் தனியார் ,இணைய  ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.  


 
அப்போது அவர் கூறுகையில், "நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் கர்நாடாகா மாநிலத்தில் உள்ள குடகுலதான்.  எனக்கு சின்ன வயசுல இருந்தே சினிமால நடிக்குற ஆர்வம் இருந்துச்சு.  96 படத்தில் நடிச்சது என்னோட அதிர்ஷ்டம் என்று தான் சொல்லனும். நிறைய பேர் தங்களோட வாழ்க்கயில் அந்த படத்தை தொடர்பு படுத்தி பேசுறாங்க. நிறைய பேர் 5, 6 தடவ படத்தை பாத்ததா சொன்னாங்க. 96 படத்துல என்னோட கேரக்டர் சின்னதுன்னாலும், நல்லா பன்னிருக்கிங்கனு நிறைய பேர் சொல்றாங்க. எனக்கு ரேவதி மேடமை ரெம்ப பிடிக்கும். அவங்கள மாதிரி எல்லா கேரக்டர்ஸும் பன்னனும்னு ஆசை இருக்கு.  சீமத்துரை படத்துல கிராமத்து பொண்ணா நடிச்சிருக்கேன்" என்றார்.