புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 12 நவம்பர் 2018 (12:05 IST)

மணிரத்னத்தின் படத்துக்கு இசையமைக்க போகும் கோவிந்த் வஸந்தா

காதலின் ஞாபகத்தையும், காதலர்களின் நினைவுகளையும் உருக வைத்து உருவாக்கப்பட்ட 96 படம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து சென்றது. 
 
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்த படம் 96. பள்ளிக் காலத்தில் காதலிக்கும் காதல் ஜோடிகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட 96 படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. 
 
இந்நிலையில் தற்பொழுது கிடைத்த தகவல் என்னவென்றால், 96 படத்துக்கு இசையமைத்தவர்  கோவிந்த் வஸந்தா. இவர் மலையாளத்தில் துல்கர், பஹத் பாசில் படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஶ்ரீ தற்போது விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்துக்கு  இசையமைத்து வருகிறார்.   தற்போது மணிரத்னம் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கோவிந்த் வஸந்தாவுக்கு கிடைத்துள்ளது.
 
இந்த படத்தை மணிரத்னம் தயாரிக்க தனசேகரன் என்பவர்  இயக்குகிறார். மணிரத்னம் இந்தப்படத்தின் கதையை இணைந்து எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.