1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (14:15 IST)

வடிவேலு பிறந்த நாளில் திரளாய் கலந்துகொண்ட பிரபலங்கள் ! வைரல் புகைப்படங்கள்

VADIVELU
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரான நடிகர் வடிவேலு  வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில்  இயக்குனரும் நடிகருமான ராஜ்கிரணால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் வடிவேலு. அதன்பின், ஏராளமான படங்களில் நடித்து தன் கிராமத்துப் பாணி கலந்த காமெடியால் ரசிகர்களைக் கவர்ந்தார்.

ஒரு காலக்கட்டத்தில், தேவர் மகன் உள்ளிட்ட படங்களில் நடித்தபடி, காதலன் போன்ற மாடர்ன் கதையம்சம் உள்ள படங்களிலும் நடித்து அசத்தினார்.

அவரது சம காலத்தவரான விவேக்குடனும் அவர் இணைந்து நடித்துள்ளார். பல முன்னணி நடிகர்களின் விருப்ப நடிகராக இருந்த வடிவேலு, 2011 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின் சில சர்ச்சைகளால் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் சுராஜ் இயக்கத்தில்,வடிவேலு  நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பாடல்களுக்கு நடனம் அமைக்க பிரபுதேவா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது சம்மந்தமான அறிவிப்பை லைகா வெளியிட்டிருந்தது.

இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. சென்னை, மைசூர் என அடுத்தடுத்து நடந்த படப்பிடிப்பில் வடிவேலு உள்ளிட்ட படக்குழுவினர் நடித்து முடித்துள்ளனர். கடைசியாக படத்தின் பாடல் ஒன்று படமாக்கப்பட்ட நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் வடிவேலு நேற்று தன் 62 வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு சினிமாத்துறையினரும், ரசிகர்களும், மக்களும் வாழ்த்துகள் தெரிவித்தனர். மேலும்  வடிவேலு பிறந்த நாளில் நேரில் சென்று பல பிரபலங்கள் கலந்துகொண்டு அவரை வாழ்த்தினர். குறிப்பாக உதய நிதி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் அப்புகைப்படங்களில் உள்ளனர்.

வடிவேலு,''தனக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும்  நன்றி'' எனத் தெரிவித்து, நேற்றைய பிறந்த நாள் புகைப்படங்களையும் டுவிட்டரில்  பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது.