திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: சனி, 8 டிசம்பர் 2018 (10:52 IST)

எனது முதல் காதல் அஜித்துடன் தான்! பிரபல நடிகை ஓபன் டாக்!

நீ நடந்தால் நடை அழகு, நீ சிரித்தால் சிரிப்பழகு என்று அஜித்தை மனதுக்குள் கொஞ்சாத நடிகைகளே தமிழ் சினிமாவில் இல்லையெனலாம்.



அந்த அளவுக்கு நடிகைகளுக்கு நடிகர் அஜித்தை ரொம்பவே பிடிக்கும். அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், தமிழ் சினிமாவில் எந்த நடிகையும் வாய்ப்பை நிராகரிக்க மாட்டார், ஏனெனில் அந்த அளவுக்கு அஜித் பழகுவதுக்கு இனிமையானவர். 
 
இந்நிலையில்  அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக  நடித்த மலையாள நடிகை பார்வதி நாயர் அஜித்தை வெகுவாக புகழ்ந்தார்.


 
அதில், எனது பள்ளி பருவத்தில் நிறைய பேருடன் காதல் உணர்வு ஏற்பட்டது. ஆனால் முதல் காதல் என்றால் அது அஜித் சாருடன் தான். ஆனால் தற்போது அவருடனே ஒரு படத்தில் நடித்துவிட்டேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.