புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 21 நவம்பர் 2024 (10:58 IST)

ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்துக்கு காரணம் இந்த பாடகியா? - உண்மையை சொன்ன வக்கீல்!

AR Rahman Mohini dey

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் விவாகரத்து அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதற்கான காரணம் குறித்து அவரது வக்கீல் விளக்கம் அளித்துள்ளார்.

 

 

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஹாலிவுட் வரை கொடிக்கட்டி பறப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் கடந்த 1995ம் ஆண்டில் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், இவர்களுக்கு கதீஹா, ரஜீமா என்று இரண்டும் மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர். 

 

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுடனான திருமண வாழ்க்கையிலிருந்து விடைப்பெறுவதாக சாய்ரா பானு கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார். அதை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானும் இந்த முடிவு தொடர்பாக வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார். இது நடந்த அடுத்த நாளே, ஏ ஆர் ரஹ்மானிடம் பல ஆண்டுகளாக துணை பாடகியாக பணியாற்றி வரும் மோஹினி ரே தனது கணவரை பிரிவதாக அறிவித்தார்.
 

 

இந்த அடுத்தடுத்த அறிவிப்புகள் சினி உலகில் பரபரப்பை ஏற்படுத்திய அதேசமயம், ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்திற்கு மோஹினி ரே தான் காரணம் என சமூக வலைதளங்களில் பேச்சும் எழத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மானின் வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.

 

ஏ.ஆர்.ரஹ்மான், சாய்ரா பானு இருவருக்குமான வழக்கறிஞரான அவர், சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை என்றும், இருவரும் தாங்களாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இது ஒரு இணக்கமான விவாகரத்து என்றும் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K