அவருடன் நடிக்க என் மகள் மறுத்துவிட்டாள் – அர்ஜூன்

arjune dhuruva
Sinoj| Last Updated: வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (16:01 IST)


இந்திய சினிமாவில் ஆக்சன்
கிங் என அழைக்கபடுபவர் நடிகர் அர்ஜூன். இவர் சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்துவருகிறார்.


இவர் என் தங்கை மகன் துருவா சாரஜா கன்னட சினிமாவில் இளம் நடிகராகக் கவனம் பெற்றுள்ளார்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தமிழில் செம திமிரு என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் துருவாவுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தான நடித்திருக்கிறார். இப்படம் வரும் 19 ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்தில் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அர்ஜூன், இப்படம் குறித்துப் பேசியதாவது : துருவா எனக்கு மருமகன் என்றாலும் மகன் மாதிரிதான். அவர் மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பி. நான் சிரஞ்சீவிக்குத்தான் நடிப்புப் பயிற்சிகொடுத்தேன். ஆனல் துருவா தானே பயிற்சி எடுத்துக்கொண்டு இன்று ஹீரோவாக நிற்கிறார். அவரது நடிப்பில் வெளியாகியுள்ள 3 படங்களூம் ஹிட்தான். மேலும் என் மகள் ஐஸ்வர்யாவை துவாவுடன் நடிக்க வைக்க விரும்பி இது குறித்து மகளிடம் கேட்டதற்கு அவள் கோபித்துக்கொண்டாள் எனத் தெரிவித்துள்ளார்.

செமதிருமி படம் நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :