விஷ்ணுவிஷாலின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
தமிழ் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவராகிய விஷ்ணு விஷால் தற்போது காடன், ஜெகஜாலக்கில்லாடி, எப்ஐஆர் மற்றும் மோகன்தாஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் காடன் மற்றும் ஜெகஜாலக்கில்லாடி விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
எப்ஐஆர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த திரைப்படமான மோகன்தாஸ் என்ற படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது
இந்த படத்தில் ஏற்கனவே விஷ்ணுவிஷால் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை முரளி கார்த்திக் என்ற ஒரு இயக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து உள்ளார் என்ற தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது