1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : திங்கள், 23 செப்டம்பர் 2019 (20:51 IST)

சினிமாவில் நடிக்கும் அவதாரம் எடுத்த துணை முதல்வர் !

ஆந்திரமாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒ.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் முதல்வர் 5 துணைமுதல்வர்களை நியமித்து அசத்தினார்.  இதில் ஒருவர் புஷ்பா ஸ்ரீவாணி ஆவார். இவர் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகவும் உள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் மற்றும் துணைமுதல்வரான புஷ்பா ஸ்ரீவாணி, பக்ருதி அதிதி தேவோ பவா என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ள அம்ருத பூமி என்ற படத்தில் நடிகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
மேலும், இப்படம் இயற்கை மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் உருவாகவுள்ளதாகவும், துணைமுதல்வருடன், விழியநகரம் மாவட்ட ஆட்சியர் ஹரிஜவஹர்லாலும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.