தேவராட்டம்' இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு!

Last Modified புதன், 15 மே 2019 (20:28 IST)
கவுதம் கார்த்திக் நடித்த 'தேவராட்டம்' படத்தை இயக்கிய இயக்குனர் முத்தையா, தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட ஜாதி குறித்த படங்களையே இயக்கி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பா.ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் ஒரே ஜாதி குறித்து படம் இயக்கினால் அதை புரட்சி என்று கூறுபவர்கள் முத்தையா படம் எடுத்தால் மட்டும் சர்ச்சைக்குரியது என்று கூறுவது ஏன் என்று முத்தையாவிற்கும் ஆதரவுக்குரல் எழுந்தது
இந்த நிலையில் 'தேவராட்டம்' படத்தை அடுத்து வழக்கம்போல் மீண்டும் ஒரு கிராமத்து அதிரடி ஆக்சன் கதையை முத்தையா தயார் செய்துவிட்டாராம். இந்த படத்தின் ஹீரோவாக சிம்பு நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கவுள்ள 'மாநாடு' திரைப்படம் இன்னும் உறுதி செய்யப்படாமல் இருக்கும் நிலையில் சிம்பு, முத்தையா இயக்கும் படத்தில் நடிக்க முடிவு செய்துவிட்டதாகவும், இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்திலும் நாயகியாக தேவராட்டம் நாயகி மஞ்சிமா மோகன் நடிக்கவுள்ளாராம். ஏற்கனவே சிம்புவுடன் மஞ்சிமா, 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :