புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 12 மே 2019 (16:52 IST)

அஞ்சலியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளில் ஒருவரான அஞ்சலி நடித்து முடித்துள்ள திகில் பேய்ப்படம் 'லிசா'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து கடந்த சில வாரங்களுக்கு முன் ரிலீசுக்கு தயாரான நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
'லிசா' திரைப்படம் இம்மாதம் 24ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே இந்த படம் மே 24ஆம் தேதி வெளியாகும் என கடந்த மாதமே அறிவித்திருந்தாலும் இடையில் இந்த படம் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது ரிலீஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த படம் இந்தியாவின் முதல் திகில் 3D படம் என்பது குறிப்பிடத்தக்கது. ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அஞ்சலி உள்பட படக்குழுவினர் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை இன்று முதல் தொடங்கியுள்ளனர்.
 
அஞ்சலி, சாம் ஜோன்ஸ், மார்க்கண்ட் தேஷ்பாண்டே, யோகிபாபு, மைம்கோபி உள்பட பலர் நடித்துள்ள 'லிசா' படத்தை ராஜூ விஸ்வநாத் இயக்கியுள்ளார். சந்தோஷ் தயாநிதி இசையில் பிஜி முத்தையா ஒளிப்பதிவில் கவுதம் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பிஜி முத்தையாவின் பிஜி மீடியா வொர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது