திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 28 டிசம்பர் 2023 (19:58 IST)

விஜயகாந்த் உடலுக்கு 'இசைஞானி' இளையராஜா நேரில் அஞ்சலி

ilayaraja -vijayakanth
இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, கேப்டன் விஜயகாந்த் மறைந்த செய்தியறிந்து மனவருத்தமடைந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
 
தமிழ் சினிமாவின் பிரபல  நடிகரும், தேமுதிக  நிறுவனருமான விஜயகாந்த் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.

அவரது மறைவுக்கு சினிமாத்துறையினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்.

நாளை மாலை தேமுதிக அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில் விஜயகாந்த் உடலுக்கு நடிகர்  ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, இசைஞானி இளையராஜா, விக்னேஷ், கவிஞர் சினேகன், அர்ஜூன், கவுண்டமணி, முனீஷ் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா,'' கேப்டன் விஜயகாந்த் மறைந்த செய்தியறிந்து மனவருத்தமடைந்தேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்'' என்று தெரிவித்துள்ளார்.