செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 7 ஜனவரி 2022 (13:22 IST)

இசையமைப்பாளர் தமன் கொரோனாவால் பாதிப்பு!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் தமன் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
‘தளபதி 66’ சிவகார்த்திகேயனின் 20-வது படம் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் பிஸியான இசையமைப்பாளர் தமன் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமன் அவர்களுக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவரின் அறிவுரைப்படி அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
தமன் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதால் அவர் இசையமைத்து வரும் படங்களில் பணிகள் தாமதமாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது