செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 1 ஜனவரி 2024 (19:17 IST)

தனது திருமணம் குறித்து அறிவித்த முரட்டு சிங்கில் பிரேம்ஜி

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜி அமரன். 
 
இவர், சிம்புவின் வல்லவன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அதன்பின்னர் சென்னை 28, கோவா, சத்தம் போடாதே, சந்தோஷ் சுப்பிரமணியம், சத்யம், சேட்டை, சிம்பா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்,
 
இந்த நிலையில், பிரேம்ஜி அமரன் இன்னும் திருமணம் செய்துகொள்ளைவில்லை. இவரது திருமணம் பற்றி அவரது தந்தை பலமுறை பேட்டியளித்திருந்தார்.
 
இந்த நிலையில், 43 வயதாகும் பிரேம்ஜி அமரனுக்கு கடந்தாண்டு திருமாணமாகும் என கங்கை அமரன் கூறியிருந்த நிலையில், இந்த புத்தாண்டில் பிரேம்ஜி அமரன் தன் சமூக வலைதள பக்கத்தில், இவ்வருடம் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.

எனவே ரசிகர்களும், சினிமாத்துறையினரும் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.