1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 27 டிசம்பர் 2023 (18:31 IST)

உயிருடன் இருப்பவருக்கு இறப்பு சான்றிதழ் கேட்ட அதிகாரி

thiruvarur
உயிருடன் இருப்பவருக்கு இறப்பு சான்றிதழ் கேட்ட அதிகாரியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூரில் உயிருள்ள நபருக்கு இறப்பு சான்றிதழ் கேட்டு, சாதி மறுப்பு திருமணத்தைப் பதிவு செய்ய மறுத்த ஊத்துக்கோட்டை சார் பதிவாளரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூரில் உள்ள  ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த வீரமணி  கீதாராணி என்ற காதல்ஜோடி கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்தனர்.

இத்திருமணத்தை பதிவு செய்துள்ளனர். அந்த விண்ணப்பத்தில் மணமகனின் தாய் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் உயிருடன் உள்ள மணமகன் தந்தையின் இறப்பு சான்றிதழை சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி வீரமணி –கீதாராணியின் சாதி மறுப்பு திருமணத்தை பதிவு செய்ய ஊத்துக்கோட்டை சார் பதிவாளர்  நிராகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.