திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 6 ஜூலை 2018 (21:04 IST)

ரகசிய டாஸ்க்கில் வெற்றி பெற்ற மும்தாஜ்; நேரடியாக ஃபைனலுக்கு செல்வாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை செல்வார் என்று எதிர்பார்க்கப்படும் போட்டியாளர்களில் ஒருவர் மும்தாஜ். இவருக்கு சவாலாக ஜனனி, ஐஸ்வர்யா, டேனியல் வர வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இதுவரை தலைவியாக இல்லாவிட்டாலும், அவரிடம் உள்ள ஆளுமை அந்த வீட்டில் உள்ள யாரிடமும் இல்லை என்று கூறலாம்
 
இந்த நிலையில் மும்தாஜூக்கு பிக்பாஸ் ஒரு ரகசிய டாஸ்க் கொடுக்கின்றார். அவரது அணியில் உள்ள தண்ணீர் தொட்டியில் 1200 லிட்டர் தண்ணீர் லெவலுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே இந்த ரகசிய டாஸ்க். மும்தாஜ் இந்த டாஸ்க்கை புத்திசாலித்தனமாக செயல்படுத்துகிறார். ஆங்கிலத்தில் வேண்டுமென்றே பேசி, ஓட்டையை அடைப்பது போல் நடித்து தண்ணீரை கசியவிட்டு, என செயல்பட்டு 1200 லிட்டருக்கு கீழ் கொண்டு வந்து தனது ரகசிய டாஸ்க்கில் வெற்றி பெற்றுவிட்டார். இதனை அறிவித்த பிக்பாஸ், மும்தாஜூகான பரிசு விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
 
நேற்றைய நிகழ்ச்சியின் முடிவில் மும்தாஜ் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. மும்தாஜ் கேக் வெட்டி அனந்து, பொன்னம்பலம் ஆகிய சீனியர்களுக்கு முதலில் கேக் ஊட்டுகிறார். எல்லோரும் கேக் சாப்பிட்டு கொண்டிருக்கும்போதே விளக்குகள் அணைக்கப்பட்டு நேற்றைய நிகழ்ச்சிகள் முடிவுக்கு வருகிறது. ரகசிய டாஸ்க்கில் வெற்றி பெற்ற மும்தாஜூக்கு இன்று பரிசு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக அவர் நேரடியாக பைனலுக்கு செல்வார் என்ற அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.