அப்படி என்ன சொன்னார் பொன்னம்பலம்? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

Last Modified செவ்வாய், 26 ஜூன் 2018 (09:51 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 10 நாட்களாக ஒளிபரப்பாகி வந்தாலும் கமல் வரும் சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில் சுவாரஸ்யம் குறைவாக காணப்படுகிறது. இந்த நிகழ்ச்சி எப்போது சூடுபிடிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் இன்று பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்களிடம் பொன்னம்பலம் சிக்கி கொண்டார் போல தெரிகிறது.

நேற்றைய நிகழ்ச்சியின்போது பொன்னம்பலம், மும்தாஜ் குறித்து ஒரு ஜோக் அடித்தார். மும்தாஜூக்காக தாஜ்மஹால் கட்டலாம், தாஜ்மகாலுக்காக மும்தாஜை கட்ட முடியுமா? என்று கூறினார். அதில் 'கட்ட முடியுமா" என்பதை அவர் திருமணம் என்ற அர்த்தம் வகிக்கும் வகையில் கூறினார். இந்த ஜோக் தான் இன்று தீயாய் பற்றி கொண்டுள்ளது.
மும்தாஜிடம் மற்ற பெண் போட்டியாளர்கள் இதுகுறித்து பற்ற வைக்க, உடனே மும்தாஜ் எழுந்து பொன்னம்பலத்தை நோக்கி செல்வது போல் இந்த புரமோ வீடியோ உள்ளது. இதன் விளைவு என்னவென்று இரவு நிகழ்ச்சியின் மூலம் பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :