ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 12 நவம்பர் 2022 (18:10 IST)

''வாய் வெல்லாது. வாய்மையே வெல்லும்''- பார்த்திபனை சீண்டிய ப்ளூசட்டை மாறன்

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படம் ஓடிடியில் வெளியாகியுள்ள  நிலையில், இப்படம் இரண்டாவது சிங்கில் ஷாட் நான் லீனியர் பிலிம் என்று ஆதாரத்துடன்  ப்ளூ சட்டை மாறன் டுவீட் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்த படம் இரவின் நிழல். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப்படம் தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,  இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரைத்த 13 படங்களில்  ஒன்றாக இடம்பிடித்தது.

இந்த நிலையில், இப்படம் ஓடிடியில் பார்த்திபனுக்கே தெரியாமல் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில்,  இப்படம் வெளியான போதே, இப்படம் முதல் சிங்கில் ஷாட்டா? இல்லையா என்பது குறித்து நடிகர் பார்த்திபனுக்கும், திரை விமர்சகர் ப்ளூசட்டை மாறனுக்கும் இடையே வாக்குவாதம் வலுத்தது.

இந்த நிலையில், இரவில் நிழல் படம் உலகின் இரண்டாவது சிங்கில் ஷாட் நான் லீனியர் படம் என்று ஐஎம்டிபி தளத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைக் குறிப்பிட்டு, இன்று டுவிட்டர் பக்கத்தில் ப்ளூசட்டை மாறன், வாய் வெல்லாது வாய்மையே வெல்லும் என்று பார்திபனை சீண்டியுள்ளார்.

Edited by Sinoj