'லவ்டுடே' பட இயக்குனரைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினி
லவ்டுடே பட இயக்குனர் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில், கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கோமாளி. ஜெயம் ரவியின் நடிப்பில் உருவான இப்படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார்.
கோமாளி வெற்றியை அடுத்து இயக்குனர் பிரதீப் ரங்க நாதன் இயக்கி நடித்த திரைப்படம் லவ்டுடே.
இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது.
இந்த நிலையில், இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த பிரதீப் ரங்க நாதன் தன் டுவிட்டர் பக்கத்தில், இதைவிட வேறென்ன கேட்க முடியும்? சூரியனுக்கு அருகில் நிற்பது போலிருந்தது. இறுக்கமான அணைப்பு, கண்கள், சிறிப்பு, ஸ்டைலிஸ் அவரது ஆளுமை எல்லாம் சூப்பர் ஸ்டாரை பார்த்தபோது,. லட் டுவ்டே படத்திற்காக அவர் என்னை பாராட்டினார். அவர் கூறியதை நான் என்றும் மறக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
Edited by Sinoj