26 ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த மோர்கன் ப்ரீமேன்!

Last Modified வெள்ளி, 16 அக்டோபர் 2020 (13:01 IST)

1994 ஆம் ஆண்டு வெளியான ஷஷாங்க் ரிடெம்ஷன் திரைப்படம் 26 ஆண்டுகள் கடந்துள்ளதை அடுத்து அப்படத்தின் நடிகர் மோர்கன் ப்ரீமேன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

1994 ஆம் ஆண்டு வெளியான ஷஷாங் ரிடம்ஷன் திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தாலும் இப்போது கல்ட் சினிமாவாக கொண்டாடப்படுகிறது. ஐஎம்டிபி எனப்படும் திரைப்படங்களுக்கான தளத்தில் 9.2 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் படமாக சாதனைப் படைத்து வருகிறது.

இந்நிலையில் இந்த படம் இப்போது 26 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் அந்த படத்தின் நடிகர் மோர்கன் ப்ரீமேன் ரசிகர்களுக்கு டிவிட்டரில் நன்றியைத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :