செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 16 அக்டோபர் 2020 (12:22 IST)

நீங்க என்ன ப்ளட் க்ரூப்: கொரோனா அபாயம் உங்களுக்கு எந்த அளவு?

’ஓ’ ரத்த பிரிவினர் குறைவாகவே கொரோனா தொற்றுக்கு ஆளவதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. 
 
கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 90 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 63,371 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 73,70,469 ஆக உயர்ந்துள்ளது.
 
ஒரே நாளில் 895 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,12,161 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 64,53,780 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 8,04,528 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்நிலையில், கனடா நாட்டில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் ’ஓ’ ரத்த பிரிவினர் குறைவாகவே கொரோனா தொற்றுக்கு ஆளவதாகவும் இவர்களுடன் ஒப்பிடுகையில் ஏ, பி மற்றும் ஏபி பிரிவினர் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவு தெரியவந்துள்ளது.