வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2020 (17:37 IST)

பிரபல நடிகருக்கு மூளைப் பக்கவாதம்....சினிமாதுறையினர், ரசிகர்கள் அதிர்ச்சி !

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகர் ராகுல் ராய் மூளைப்பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது சினிமா துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குநர் மகேஷ் பட் இயக்கத்தில் உருவாக ஆஷிகி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ராகுல்ராய்.

இவர் தற்போது நிதின் குமார் குப்தா இயக்கிவரும் எல் ஏசி – லிவ் த பேட்டில் என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் கார்கில் மலைப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பில் கலந்துகொண்ட ராகுல் ராய்க்கு வசனங்களைச் சொல்ல முடியாமல் திணறினார். பின் உடல்நிலைக் குறைவு ஏற்படவே அவரைப் படக்குழுவினர் ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

அங்கு மேலும் அவரது உடல் நிலை மோசமானதை அடுத்து அவரை மும்பைக்கு கொண்டு வந்து நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளைப் பக்கவாதநோய் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

எனவே ராகுலில் குடும்பத்தினர் மற்றும் சினிமாத்துறையினர் அவர் விரையில் நலம்பெறவேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.#rahulroy #strok #vbollywood