திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 1 டிசம்பர் 2020 (16:17 IST)

ரஜினியின் அரசியல் நிலைப்பாடு… இன்று முடிவு அறிவிப்பு…??

நேற்று தனது ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ரஜினி விரைவில் அரசியல் குறித்த முடிவெடுப்பதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து நேற்று இரவில் ஒரு செய்தியில்,  தனது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நிர்வாகிகள் பற்றி தன்னிடம்  ஆதாரம் இருப்பதாகத் தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

ரஜினி எப்போது கட்சி தொடங்குவாரோ என்று அவரது ரசிகர்கள் ஆர்வலுடன் உள்ளனர். இந்நிலையில், இன்று இரண்டாம் நாளாக சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.

குறிப்பாக இன்று தனது அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவு வெளியாகும் என தெரிகிறது.