திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 13 நவம்பர் 2020 (19:26 IST)

எண்ணெயில பொரிச்சு எடுத்துடுவேன்: மனோபாலாவை மிரட்டிய நயன்தாரா!

எண்ணெயில பொரிச்சு எடுத்துடுவேன்: மனோபாலாவை மிரட்டிய நயன்தாரா!
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படம் நாளை ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்திற்கு பொதுமக்களிடமிருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக இந்த படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் அதற்குப் பிறகு இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் ஆர்ஜே பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் ஸ்நீக்பிக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கடவுள் பெயரால் பொது மக்களை மூளைச்சலவை செய்து ஏமாற்றிக் கொண்டிருக்கும் மனோபாலாவை நயன்தாரா மிரட்டுவது போன்ற ஒரு காட்சி உள்ளது
 
ஜீசஸ் பெயரால் மோசடி செய்வது அவருக்கு பிடிக்காது என்றும், ஜீசஸ் என்னுடைய நண்பர் தான் என்றும், நரகத்திற்கு உன்னை கொண்டு சென்று எண்ணெயில் போட்டு பொரித்து விடுவேன் என்றும் மனோபாலாவை நயன்தாரா மிரட்டி உள்ள காட்சி உண்மையாகவே மிரட்டலாக உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்