ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (13:46 IST)

பண மோசடி வழக்கு: பிரபல சினிமா தயாரிப்பாளர் கைது

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் 16 கோடி ரூபாய் பெற்ற மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர். இவர் மீது சென்னையைச் சேர்ந்தவரும், பாலாஜி மீடியா நிறுவன உரிமையாளருமான பாலாஜி என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதில், கடந்த 2020 ஆம் ஆண்டு லிப்ரா புரோடெக்சன்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ரவீந்தர் அறிமுகமானார். நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல் திட்டம் ஆரம்பிக்கவுள்ளதாகவும், இதன் மதிப்பு ரூ.200 கோடி என்று கூறினார். இதில், முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்று கூறி, போலியான ஆவணங்களைக் காட்சி என்னை ரூ.16 கோடி முதலீடு செய்ய வைத்தார்.

அவர் சொன்னதுபோல் எந்த திட்டத்தையும் துவங்கவில்லை….என் பணத்தையும் திருப்பித் தரவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த வழக்குத் தொடர்பாக அசோக் நகரில் உள்ள இல்லத்தில் வைத்து ரவீந்தரை போலீஸார் கைது செய்தனர்.

அதேபோல் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான விஜய், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆன்லைன் வாயிலாக ரவீந்தர் மீது கடந்த ஜூன் மாதம் புகார் அளித்திருந்தார்.  அதில், கிளப் ஹவுஸ் மூலம் அறிமுகமான ரவீந்தர் ஒரு நடிகருக்கு முன்பணம் கொடுக்க ரூ.20 கடன் கேட்டார். இதற்காக ரூ.1 லட்சத்தை இரு தவணையாக அவரது வங்கிக் கணக்கிற்கு இரு தவணையாக அனுப்பினேன். ஆனால் வாங்கிய பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாக கூறியிருந்தார். இதுகுறித்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.