வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (14:09 IST)

இந்த படத்தில் எந்த நடிகையும் துன்புறுத்தப்படவில்லை… கேரள சினிமா சர்ச்சை குறித்து பரவும் புகைப்படம்!

மலையாளத் திரை உலகில் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான நிலையில் பல முன்னணி நடிகர்கள் மீதான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால்  உள்பட மலையாள நடிகர் சங்கம் கூண்டோடு கலைந்து விட்டதாகவும் அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா செய்து விட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்ட மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன் லால் உள்ளிட்ட அனைவரும் கூண்டோடு பதவி விலகினர். இதில் மோகன் லால் மீதும் பாலியல் புகார்கள் உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த சர்ச்சைகளால் மலையாளத் திரையுலகமே பற்றி எரிந்துகொண்டிருக்கும் நிலையில் இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அதில் திரைப்படம் தொடங்கும் முன்னர் போடப்படும் டிஸ்க்ளெய்மரான “இந்த படத்தின் உருவாக்கத்தின் போது எந்த விலங்குகளும், பறவைகளும் துன்புறுத்தப்பட்வில்லை” என்பதை மாற்றி ‘இந்த படத்தின் உருவாக்கத்தின் போது பெண்கள் யாரும் துன்புறுத்தப்படவில்லை” என்று மாற்றி பரப்பி வருகின்றனர்.