வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (14:17 IST)

விஜய், அஜித்துக்கு முந்தைய தலைமுறை நடிகர்கள் தைரியமாக பேசுவார்களா? பாலியல் சுரண்டல் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கோபம்!

மலையாளத் திரை உலகில் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான நிலையில் பல முன்னணி நடிகர்கள் மீதான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால்  உள்பட மலையாள நடிகர் சங்கம் கூண்டோடு கலைந்து விட்டதாகவும் அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா செய்து விட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில் தமிழ் சினிமாவிலும் இதுபோல நடந்துகொண்டுதான் இருக்கிறது என்று பலரும் பேசிவருகின்றனர். இதுபற்றி பேசியுள்ள இயக்குனரும் நடிகருமான லட்சுமி ராமகிருஷ்ணன் “ இப்போதிருக்கும் நடிகர்களான விஜய், அஜித், கார்த்தி, சூர்யா போன்றவர்கள் தாங்கள் பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தியதில்லை என தைரியமாக சொல்வார்கள். ஆனால் அதற்கு முந்தைய தலைமுறை நடிகர்களால் அப்படி வெளியே வந்து சொல்ல முடியுமா?

நான் தனிப்பட்ட உறவுகளை பற்றி சொல்லவில்லை. வாய்ப்புக் கொடுக்கிறேன் என்று பாலியல் ரீதியாக நடிகைகளை பயன்படுத்திக் கொண்டதை சொல்கிறேன். இந்தி சினிமாவில் தான் பெண்களை அவமானப்படுத்தும் விதமாக பாடல்களில் பாடியதற்காக அமீர்கான் இப்போது மன்னிப்புக் கேட்டுள்ளார். அதுபோல இப்போது தமிழ் நடிகர்கள் தங்கள் தவறுக்கு மன்னிப்புக் கேட்பார்களா?” எனக் கூறியுள்ளார்.