தமிழ்நாட்டில் மட்டும் 350 திரைகள்… மாஸ் காட்டிய மோகன்லாலின் எம்புரான்!
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தனது முதல்படமாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கினார். இதற்கிடையில் லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகத்தை பிருத்விராஜ் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
ஆனால் கோவிட் உள்ளிட்ட காரணங்களால் எம்பூரான் திரைப்படத்தின் ஷூட்டிங் நீண்ட நாள் தாமதத்துக்குப் பிறகு கடந்த ஆண்டு இறுதியில் நிறைவடைந்தது. அடுத்தடுத்து படத்தின் முதல் லுக் போஸ்டர், டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை ரிலீஸாகிக் கவனம் ஈர்த்த நிலையில் இன்று படம் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசாகிறது.
இந்நிலையில் எம்புரான் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 350 திரைகளில் ரிலீஸாகிறது. இதுவரை தமிழ்நாட்டில் எந்தவொரு மலையாளப் படமும் இத்தனை அதிக எண்ணிக்கையில் ரிலீஸானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.