வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 25 ஜூன் 2023 (07:24 IST)

எத்தனை பேர் குறை சொன்னாலும்… தேவர் மகன் ஒரு காவியம் – மாரி செல்வராஜை சீண்டும் மோகன் ஜி!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாமன்னன் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த கமல்ஹாசன் முன்பு படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் தேவர் மகன் திரைப்படம் குறித்து பேசியது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

இதையடுத்து தேவர் மகன் சிறந்த படம் ஒரு குழுவினரும், அது சாதியத்தை தூக்கிப் பிடித்த படம் என மற்றொரு தரப்பினரும் விவாதங்களை நடத்தி வருகின்றனர். மாரி செல்வராஜ் மேடையில் பேசியது ஒரு உணர்ச்சிப் பூர்வமான தருணத்தில் பேசியது. நான் பேசியது கமல் சாருக்கு புரியும் என தன் பேச்சுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களின் இயக்குனர் மோகன் ஜி  தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் “தேவர் மகன் தமிழ் சினிமாவின் சிறந்த திரைக்கதைகளில் ஒன்று. 30 வருடங்கள் ஆகியும் இப்படி ஓர் ஆழமான தென் மாவட்ட கதையை இதுவரை யாரும் சொல்லாததே இந்தத் திரைப்படத்தின் தனித்தன்மை.. எத்தனை பேர் குறை சொன்னாலும் காலத்தால் மறைக்க முடியாத காவியம் #தேவர்மகன்” என கூறியுள்ளார்.