வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (16:54 IST)

பாஜகவின் அரசியல் மிகவும் முரட்டுத்தனமானது; மோடிக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம்..!

Mallikarjun Kharge
இந்திய ஜனநாயக வரலாற்றில் பாஜகவின் அரசியல் முறை முரட்டுத்தனமானது மற்றும் மிகச் சீரழிவாக இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இந்திய ஜனநாயக வரலாற்றில் பாஜகவின் அரசியல் மிகவும் முரட்டுத்தனமானது. தயவு செய்து பாஜக தலைவர்களை ஒழுக்கத்துடனும், நன்னெறியுடன் நடந்து கொள்ள அறிவுறுத்துங்கள் இதுபோன்ற வன்முறை கருத்துகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்தால் இந்திய அரசியல் சீரழிவதை தடுக்க முடியும்;

பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி தலைவர்கள் வன்முறையான கருத்துகள் தெரிவிப்பதற்கு தேவையான நடவடிக்கையை நீங்கள் எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.


Edited by Siva