பிரதமர் மோடியை அடுத்து பெரியார் பிறந்த நாளுக்கும் விஜய் வாழ்த்து.. திராவிட பாதையா?
நடிகரும் தவெக தலைவருமான விஜய், சற்றுமுன் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த நிலையில் சற்றுமுன் பெரியார் பிறந்த நாளுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் பிரபல நடிகர் விஜய், தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:
"சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டு கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர்.பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர். மக்களை பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர்.சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண் கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதி பாதையில் பயணிக்க உறுதியேற்போம்”
இன்று காலை பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த விஜய், விநாயகர் சதுர்த்தியை குறிப்பிடாமல், ஓணம் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்ததால், அவரின் திராவிட ஆதரவு குறித்து கருத்துக்கள் எழுந்தன. இந்நிலையில், அண்ணா மற்றும் பெரியார் பிறந்த நாளில் வாழ்த்து தெரிவித்துள்ள விஜய், தன் திராவிட அரசியல் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Edited by Mahendran