செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 21 மார்ச் 2023 (18:52 IST)

மிமிக்ரி கலைஞர் கோவை குணா காலமானார்! ரசிகர்கள் இரங்கல்..!

நகைச்சுவை கலைஞர் மற்றும் மிமிக்ரி கலைஞர் கோவை குணா சற்று முன் காலமானதாக தகவல் வெளியானதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 
 
அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கோவை குணா. திரை உலக நட்சத்திரங்கள் போலவே மிமிக்ரி செய்வதில் வல்லவர் என்பதும் குறிப்பாக சிவாஜி கணேசன், கவுண்டமணி, ஜனகராஜ் போன்ற நடிகர்களின் குரல்களில் மிமிக்ரி செய்வதில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நகைச்சுவை கலைஞர் கோவை குணா சற்றுமுன் காலமானதாக தகவல் வெளியானதை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது மறைவிற்கு ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தங்கள் இரங்கல் பதிப்பில் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran