திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 4 மார்ச் 2023 (10:13 IST)

பிரபல புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் சாலை விபத்தில் மரணம்: முதல்வர் இரங்கல்..!

jacob
பிரபல புகைப்பட கலைஞரின் ஸ்டாலின் ஜேக்கப் சாலை விபத்தில் மரணமடைந்ததை அடுத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல இணையதளத்தின் இணை நிறுவனர் மற்றும் புகைப்படக் கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் மறைமலைநகர் அருகே சாலை விபத்தில் காலமானார். அவரது சில புகைப்படங்கள் கடந்த சில காலங்களில் மாநிலத்தையே அதிர வைத்தது என்பதும், ஆன்லைன் பிரபலமான உணவு நிறுவனத்தையும் அவர் நடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்று காலை ஸ்டாலின் ஜேக்கப் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சையின் பலன் இன்றி உயிரிழந்தார் என அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர். புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் மறைவுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் கூறி இருப்பதாவது:
 
“நேற்று தான் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் கழகத்தின் துடிப்பான சமூக வலைத்தளச் செயல்வீரர் ஸ்டாலின் ஜேக்கப், இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உடன்பிறப்புகளுக்கு எனது ஆறுதலும் ஆழ்ந்த இரங்கல்களும்” என குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Mahendran