திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 12 மார்ச் 2023 (12:11 IST)

நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் மேடையில் நடனமாடும் அமெரிக்க கலைஞர்!

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். உலகம் முழுவதும் பெரும் ஹிட் அடித்த இந்த படம் மொத்தமாக 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து பெரும் வசூல் சாதனையையும் படைத்தது. நேரடியாக போட்டி பிரிவில் ஆஸ்கருக்கு இந்த படத்தை பல் பிரிவுகளில் நாமினேட் செய்தார் ராஜமௌலி. இந்நிலையில் இப்போது இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல்கள் பிரிவிக்கான 15 பாடல்கள் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் விரைவில் நடக்க உள்ள ஆஸ்கர் விருது விழாவில் இந்த பாடலுக்கு அமெரிக்க நடனக் கலைஞரான லாரன் காட்லீப் நடனமாட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அவரே வெளியிட்டுள்ளார். இதுபற்றி இன்ஸ்டாகிராமில் “மதிப்புமிக்க மேடையில் இந்தியாவை பிரதிநிதித்துவ படுத்துவதில் பெருமை அடைகிறேன்” எனக் கூறியுள்ளார்.