1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 10 ஜனவரி 2024 (13:11 IST)

நூலிழையில் மிஸ் செய்த போட்டியாளர்.. மிட்வீக் எவிக்சனால் பிக்பாஸில் பரபரப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டி வரும் ஞாயிறு அன்று நடைபெற இருக்கும் நிலையில் நூலிழையில் இறுதிப்போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை போட்டியாளர் விஜய் வர்மா இழந்து விட்டதாக கூறப்படுகிறது. 
 
தற்போது ஆறு போட்டியாளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இவர்களில் ஐந்து போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்கு செல்ல உள்ளனர். ஏற்கனவே விஷ்ணு இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் மீதமுள்ள நான்கு போட்டியாளர்கள் யார் என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.
 
இந்த நிலையில் திடீரென மிட் வீக் எவிக்ஷனாக விஜய் வர்மா வெளியேற்றப்பட்டு விட்டதாகவும் இன்றைய எபிசோடில் அந்த காட்சிகள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.  
 
வைல்ட் கால் மூலம் ரீஎன்ட்ரியான விஜய் வர்மா இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் திடீரென எலிமினேஷன் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் இந்த வாரம் ஏற்கனவே எலிமினேசன் செய்யப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து கொண்டிருப்பதால் கலகலப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran