திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 5 ஜனவரி 2024 (10:25 IST)

ரூ.16 லட்சம் பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்..!

money
பிக் பாஸ் வீட்டிலிருந்து 16 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு போட்டியாளர்கள் ஒருவர் வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் 95 நாட்கள் இதுவரை முடிந்து விட்டது.  அடுத்த வாரம் ஞாயிறு அன்று இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது 8 போட்டியாளர்கள் உள்ளனர்.

இவர்களில் ஒருவர் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறலாம் என பிக் பாஸ் அறிவித்த நிலையில் ஒரு லட்சம் என்ற ஆரம்பித்த பணப்பெட்டியின் மதிப்பு தற்போது பதினாறு லட்சம் என்று வந்துள்ளது.


இதனை அடுத்து பூர்ணிமா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே செல்வதாக பிக் பாஸ் இடம் கூறியுள்ளார். அதன் பின்னர் அவர் பணப்பட்டியை எடுத்துக்கொண்டு சக போட்டியாளர்களிடம் விடை பெற்று கொண்டு தான் அட்டாக் செய்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறிவிட்டு வெளியேறிவிட்டார்.

இப்போது பிக் பாஸ் வீட்டில் ஏழு போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் அவர்களில் யார் டைட்டில் வின்னர் என்பதை அடுத்து வாரம் வரை பொறுத்து இருந்து பார்ப்போம்

Edited by Mahendran