தயாரிப்பாளர் மாற்றம்… தொடங்கியது ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா4’!
தனது திரை பயணத்தை துவங்கி டான்ஸ் மாஸ்டராக, நடிகராக, சிறந்த இயக்குனராக வலம் வருகிறார். இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் விசித்திரமான பல வெற்றி படங்களை தமிழில் கொடுத்துள்ளார். அப்படங்களில் ஒன்று தான் அவரது இயக்கத்திலும் நடிப்பிலும் மாபெரும் வெற்றி பெற்ற “முனி”. இப்படத்தை தொடர்ந்து இரண்டாம் பாகம் “காஞ்சனா” என்ற பெயரிலும் பிறகு “காஞ்சனா-2 “ என வெளியான அனைத்து பாகங்களிலும் லாரன்ஸ் வெறித்தனமாக நடித்து உள்ளார்.
இதையடுத்து அவர் காஞ்சனா 4 படத்தை பிரம்மாண்டமாக 3டி தொழில்நுட்பத்தில் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் சில ஆண்டுகளாக இந்த படம் தொடங்கப்படாமல் கிடப்பில் கிடந்தது. இடையில் பிற இயக்குனர்களின் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் லாரன்ஸ்.
இந்நிலையில் தற்போது பொள்ளாச்சியில் அந்த படத்தின் ஷுட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஆனால் அவர்களுக்கும் ராகவா லாரன்ஸுக்கும் இடையே பட்ஜெட் சம்மந்தமாக எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக தற்போது கோல்ட் மைன்ஸ் பிலிம்ஸ் மனிஷ் இந்த படத்தைத் தயாரிக்கிறார்.