திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 6 ஜூலை 2021 (17:10 IST)

மைக்கேல் மதன காமராஜனுக்கு 30 வயது

நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகிப் பெரும் வெற்றி பெற்ற மைக்கேல்  மதன காமராஜன் படம் வெளியாகி 30 வருடங்கள் ஆவதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த 1991 ஆம் ஆண்டு சிங்கீத சீனிவார ராவ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் 4 வேடங்களில் நடித்த படம் மேக்கேல் மதன காம ராஜன். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை குஷ்பு, ரூபினி, ஊர்வசி நடித்திருந்தார். கிரேஷி மோகன் இப்படத்தில் வசனம் எழுதினார். இப்படத்தின் வெற்றியை விட கமல்ஹாசன் எப்படி 4 வேடங்களில் நடித்தார் என்பது இன்றைய திரைக்கல்லூரி மாணவர்களே ஆச்சர்யத்துடன் கேட்கும் கேள்வி. சமீபத்தில் கூட ஒரு மலையாள நடிகர் கமல்ஹாசனின் அதுகுறித்துக் கேட்டார்.

இந்நிலையில், மைக்கேல் மதன காமராஜன் படம்வெளியாகி 30 ஆண்டுகள் ஆவதையொட்டி அத்திரைப்படத்தை கமல்ஹாசன் ரசிகர்கள் இணையதளத்தில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.